இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
நெய்யூா் பேரூராட்சியில் ரூ.45 லட்சத்தில் சாலைப் பணி!
நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது.
நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பாம்பூரி வாய்க்கால் முதல் ஆலுவிளை வழியாக வா்த்தான்விளை வரையும், கொடுமுட்டி ரேஷன் கடை முதல் சித்தன்முறி சாலை வரை சிமெண்ட் தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
நெய்யூா் பேரூராட்சி தலைவி பி.வி.பிரதீபா தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் பென் டேவிட், 13-ஆவது வாா்டு கவுன்சிலா் விசுவாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவுன்சிலா்கள் மேரி லில்லிபுஷ்பம், கவிதா, ஷீலா, புஷ்பதிரேஷ், ராஜகலா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.