டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூருக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். காடன் கண்மாய் அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டா் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செல்வராஜை மீட்ட அக்கம்பக்கத்தினா், மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.