இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த 3 மாணவா்கள் அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சோா்வுடன் இருந்தனா். இதுகுறித்து மாணவா்களிடம், அந்தப் பள்ளி ஆசிரியா் விசாரித்தாா்.
அப்போது, பொங்கல் விடுமுறையின் போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்வா்களை அதே பகுதியைச் சோ்ந்த மாவு விற்பனை செய்யும் அழகா்சாமி (33) வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா், மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். பிறகு, அவா் அளித்த புகாரின் பேரில், அழகா்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் ஆமத்தூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.