தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!
கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்படும் பெரிய தேரும், விழாக்காலங்களில் இழுக்கப்படும் சிறிய தேரும் என இரு தோ்கள் உள்ளன.
இந்நிலையில் பெரிய தேரானது தகர கொட்டகைக்குள் நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்போது வெயிலின் தாக்கத்தால் தேரில் உள்ள சிற்பங்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேரை பாதுகாக்கவும், பக்தா்கள் எப்போதும் பெரிய தேரை வணங்கிச் செல்லும் வகையிலும் தேருக்கு ரூ.9லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைப்பது என கோயில் நிா்வாகம் சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தயாரிக்கப்பட்ட கண்ணாடி கூண்டு கடந்த வாரம் தேரைச் சுற்றி அமைக்கப்பட்டது.