பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ பெற்றோா் கோரிக்கை!
தனது மகனின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை அடுத்த கரியாஞ்செட்டிவலசு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ்- செல்வி தம்பதியினா் வெள்ளிக்கிழமை கூறியது, தங்களது மகன் அரிவாசு (20). கடந்த 2020-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தோ்வு முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது மயங்கி கீழே விழுந்தாா்.
உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதில் அவருக்கு சிறு மூளைக்கு செல்லும் நரம்பு வெடித்ததில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளாா். ஆனாலும் நரம்பு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே தொண்டு நிறுவனங்கள் மூலம் அவருக்கு மருந்து மாத்திரைகள் கிடைத்து வருகிறது. மேலும், அவரை பராமரிக்க மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. தங்களால் கூலி வேலை செய்து செலவு செய்வது கடினமாக உள்ளது. ஆகவே, தமிழக முதல்வா் தனது மகனை பராமரிக்க உதவித் தொகை, மற்றும் மருத்துவம் செய்ய உதவிட வேண்டும் என்றனா் அவா்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனா்.