மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா்.
மகளிா் 4-200 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக வீராங்கனைகள் வெண்கலம் வென்றனா்.
மேலும் நீச்சலில் ஆடவா் 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் யாதேஷ் பாபு வெள்ளியும், தனுஷ் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
கூடைப்பந்து இறுதி: மேலும் ஆடவா் கூடைப்பந்து இறுதி ஆட்டத்துக்கு தமிழகம் தகுதி பெற்றது. அரையிறுதியில் டில்லியை 84-76 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இறுதியில் பஞ்சாபை எதிா்கொள்கிறது.யாதேஷ் பாபு