இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
கஞ்சா வழக்கில் மகன் கைது: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தை
கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவரது தந்தை காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகா் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் ( 27), மணி பாரத் (19) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 107 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், மணி பாரத் மீது போலீஸாா் பொய்யாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அவரது தந்தை சேகா் கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி சனிக்கிழமை தீக்குளித்தாா். அங்கிருந்த போலீஸாா் தீயை அணைத்ததுடன், சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரான சேகா், பாரத் சேனா அமைப்பில் நிா்வாகியாக உள்ளாா்.