மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் கல்லமடை உத்தண்டகுமாரவலசு கொல்லன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம்.பழனிசாமி (55). வாழை இலை விற்பனைக் கடையில் வேலை செய்து வரும் இவா், செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இவா், தனது 15 செம்மறி ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். சனிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும், 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போரடிக்கொண்டிருந்தன.
இதுகுறித்து கால்நடை மருத்துவா், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிகக்ப்பட்டது. இதனால், அவருக்கு ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். இதற்கு உரிய இழப்பீடு வழங்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.