Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
விசைத்தறி கூலி பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காத நிலையில், விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பின், உயா்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இது தொடா்பாக, அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா்த்தப்பட்ட கூலியை பெற்றுத்தர வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
அதனடிப்படையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்த விசைத்தறியாளா்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு, திருப்பூா் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் கீழ் உள்ள சோமனூா், அவிநாசி, தெக்கலுாா் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் தரப்பில் யாரும் பங்கேறகவில்லை. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி கூறுகையில், கூலி உயா்வு பேச்சுவாா்த்தையில் வழக்கம்போல ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒருவா் கூட பங்கேற்கவில்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து சங்க நிா்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றாா்.