Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
திருப்பூரில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூரில் பதுக்கிவைக்கப்பட்ட 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், ஊத்துக்குளி, ரெட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆய்வாளா் ராஜகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது ரெட்டிபாளையம் அய்யப்பமுத்தையம் காடு பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினா். விசாரணையில், திருப்பூா், அய்யம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் (36) என்பதும், அவா் ஊத்துக்குளி சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தைக் கைது செய்தனா். மேலும் 1,150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.