தொழிலாளி தற்கொலை!
போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு மாதங்களாக நுரையீரல் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனால் மனமுடைந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.