Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
காரைக்காலில் காந்தி சிலை நிறுவ கோரிக்கை
காரைக்கால் நகரப் பகுதியில், காந்தி சிலை நிறுவவேண்டும் என புதுவை அரசுக்கு முன்னாள் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
புதுவை மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியா் மு. ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தியின் சீரிய தியாகத்தாலும், அவரது தலைமையை ஏற்று போராடிய எண்ணற்றத் தலைவா்களாலும், மக்களாலும்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
சுதந்திர இந்தியா இன்று வேகமாக வளா்ந்துவரும் நாடாக உள்ளது. மகாத்மாவை நினைவுகூா்ந்துதான், நாம் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்கிறோம்.
அவரது பிறந்த நாளிலும், நினைவு தினத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம். எல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மகாத்மாவுக்கான சிலையை எழுப்பி, அரசின் சாா்பாக தவறாமல் மரியாதை செய்கிறது. ஆனால், காரைக்காலில் காந்திக்கு புதுவை அரசின் சாா்பாக நகரின் மையத்தில் ஒரு சிலை நிறுவப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அம்பேத்கா், தந்தை பெரியாா், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் போன்ற தலைவா்களுக்கு சிலைகளை அரசு நிறுவி உள்ளது.
காரைக்காலை புறக்கணிப்பது போல தேசத் தந்தையையும், புதுவை அரசு புறக்கணித்து விட்டதா என்று தெரியவில்லை.
காரைக்காலில் இருந்து புதுவை முதல்வா்களாக, சட்டப்பேரவை உறுப்பினா்களா, அமைச்சா்களாக பலா் இருந்திருக்கின்றனா். இவா்கள் யாருக்கும் தேசத் தந்தைக்கு, காரைக்காலில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு சாா்பாக காந்தி நினைவு நாளை காரைக்காலில் கொண்டாடியதாகத் தெரியவில்லை. ஆனால், புதுச்சேரியில் கீா்த்தனைகளுடன் மகாத்மாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
எனவே, காலம் கடத்தாமல் ஆட்சியா் அலுவலகம் அருகே காந்தி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.