செய்திகள் :

Doctor Vikatan: கால்சியம் மாத்திரை எடுத்தால் கிட்னி ஸ்டோன் வருமா?

post image

Doctor Vikatan: சிலவித உடல்நல பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருந்தேன். எனக்கு கால்சியம் சத்துக் குறைபாடு இருப்பதாகச் சொல்லி மருத்துவர் கால்சியம் சத்து மாத்திரைகளைப் பரிந்துரைத்தார். கால்சியம் மாத்திரை எடுத்துக்கொண்டால் கிட்னி ஸ்டோன் வரும் என்கிறார்கள் சிலர். இது எந்த அளவுக்கு உண்மை... நான் மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரைகளை எடுப்பதா... வேண்டாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுப்பதால் கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரக கற்கள் வரும் என்று சொல்வது உண்மையல்ல.  உங்களுடைய உடல்நல பிரச்னைகளைப் பரிசோதித்துவிட்டு அதற்கேற்பவே உங்களுக்கு கால்சியம் சப்ளிமென்ட்டை மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். எனவே, அவற்றை அவர் குறிப்பிட்டுள்ள காலம்வரை எடுத்துக்கொள்வதில் எந்தச் சிக்கலும் வராது. கிட்னி ஸ்டோனும் வராது.

மருந்துக் கடைகளில் நீங்களாக கால்சியம் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.  அவற்றின் அளவோ, எடுக்க வேண்டிய கால அளவோ, பக்க விளைவுகளோ உங்களுக்குத் தெரியாமல் எடுக்கும்போதுதான் பிரச்னையே.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி உடலுழைப்பைச் செலுத்துவது,  துரித உணவுகளைச் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, கிரில்டு சிக்கன், மட்டன் உணவுகள், அளவுக்கதிக பால், அளவுக்கதிக கீரை, சாக்லேட், சோயா பால்,  சோடியம் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதால்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த உணவுகள்கூட சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.

ஷெல் எனப்படும் ஓடு உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவுகள், கால்சியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவோருக்குத்தான் கிட்னி ஸ்டோன் பிரச்னை வரும். 

பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த உணவுகள்கூட சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம்.   இவற்றை எல்லாம் தவிர்த்து, மருத்துவர் அறிவுறுத்தும் உணவுப்பழக்கத்தையும் சிகிச்சையையும் பின்பற்றினாலே உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் சரியாகும், கிட்னி ஸ்டோன் ஆபத்தும் தவிர்க்கப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

தயாராகும் TVK - ADMK-வின் புது Plan -காலியாகும் சீமானின் கூடாரம்? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! * மக்களின் எதிர்பாப்புகள் என்னென்ன? * வக்ஃப் மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்கள் தாக்கல் ஆகிறதா? * கும்பமேளா சம்பவம் குறித்து ப... மேலும் பார்க்க

US Dollar: ``டாலரை மாற்ற நினைத்தால்..'' -இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதென்ன?

ட்ரம்ப் என்ற வார்த்தையே இனி 'அதிரடி' என மாறிவிடும் போலும். அடுத்த அதிரடியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தற்போது இறக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், "பிரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியைபச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிச... மேலும் பார்க்க

``காந்தி திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்'' -ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்... மேலும் பார்க்க

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க