செய்திகள் :

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

post image
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள்.

அக்கம், பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்காததால், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அன்று இரவில் இருந்தே போலீஸார் குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். தனிப்படை அமைத்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டும், துப்பு ஏதும் கிடைக்கவில்லை. தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு அக்கம், பக்கத்து கிணறுகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, அதிலும் தேடப்பட்டது.

குழந்தை ஜெயப்பிரியா

இந்த நிலையில், நேற்று மாலை... குழந்தை காணாமல்போன இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள் பாழடைந்த கிணற்றில் பார்த்தபோது, அந்த கிணற்றுக்குள் குழந்தையின் சடலம் மிதந்துகொண்டிருந்தது. உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் அந்த கிணற்றைச் சுற்றி குவிக்கப்பட்டனர். தகவலறிந்ததும், குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என ஏராளமானோரும் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையின் உடலை போர்வை மூலம் கட்டி மேலே கொண்டுவந்தனர். அங்கேயே தடய அறிவியல் துறையினர் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். மேலும், பெற்றோரிடம் குழந்தையின் உடலை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

குழந்தையின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்

தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டரை வயது குழந்தை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எப்படி நடந்து சென்றிருக்க முடியும்? மாயமான அன்று அமாவாசை. எனவே, இருட்டில் குழந்தையை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. விசாரணையின் முடிவில், இந்தச் சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகலாம் என்றும் காவல்துறையினரின் வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவ்வழக்கில், போலீஸாரும் மிக கவனமுடன் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக போலீஸ... மேலும் பார்க்க

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டி... மேலும் பார்க்க

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் த... மேலும் பார்க்க

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' - காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்... மேலும் பார்க்க

"என் கார்மீது மாட்டை மோதவிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம்..." - இமான் அண்ணாச்சி பேட்டி

எப்போதும் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை சீரியஸ் ஆக்கியிருக்கிறது, சமீபத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவம். குடும்பத்துடன் காரில் சென்ற இமான் அண்ணாச்சி, சாலை விபத்திலிருந்து தப்ப... மேலும் பார்க்க

ரூ.18 லட்சம் கொள்ளை: திருடனுடன் சேர்ந்து மசாஜ் செய்த காவலர்கள்... வடிவேலு பட பாணியில் தப்பி ஓட்டம்!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் இருக்கும் சாராய கம்பெனிக்குள் நுழைந்த திருடர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இது தொடர்பாக ப... மேலும் பார்க்க