திருக்குறளை மேற்கொள் காட்டி பேசிய நிதியமைச்சர்!
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வாசித்துவரும் நிர்மலா திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"
செங்கோன்மை அதிகாரத்தின் உள்ள குறளை மேற்கொள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.