"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூ...
இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்!
இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டத்தை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.