செய்திகள் :

கல்லூரிக் கழிப்பறையில் குழந்தை பெற்றுக் குப்பையில் வீசிய மாணவி!

post image

அரசு மகளிர் கல்லூரி மாணவி கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து, குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், அரியலூர், டி பழூர், அணைக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் கல்லூரியில் பயிலும் 20 வயது மாணவி ஒருவர் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் அடைந்துள்ளார். தன் கர்ப்பம் அடைந்ததை வீட்டிற்கும் மற்றும் கல்லூரிக்கும் தெரியாமல் வேறு வேறு காரணங்களைச் சொல்லி மூடி மறைத்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பறையில் அமர்ந்து பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மாணவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக வயிறு வலிப்பதாகவும் கூறி கழிப்பறைக்குச் சென்ற மாணவி, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தொடர்ந்து யூடிப் மூலம் தொப்புள் கொடி அறுத்து அந்தக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு மேல குப்பைகளை அள்ளி மூடி மறைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வகுப்பறையில் வந்து அமர்ந்துள்ளார். அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதைப் பார்த்த அருகிலிருந்த மாணவிகள் அவரிடம் கேட்டபோது மாதவிடாய் காரணமாக ரத்தப்போக்கு ஏற்படுவதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக வெளியேறுவதைப் பேராசிரியர்களிடம் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு தற்போது தான் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் காரணமாக இந்த ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைக் கேட்டு பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு பெண் குழந்தை பிறந்ததையும் அதனை குப்பைத் தொட்டியில் போட்டு மூடி வைத்துள்ளதையும் கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கல்லூரிக்குச் சென்று குப்பைத் தொட்டியிலிருந்த உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்குச் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர். தற்போது அந்த மாணவி அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாச்சியார் கோயில் மற்றும் ஆடுதுறை மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் திட்டத்தில் 4.17 லட்சம் பெண்கள் பயன்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் 4.17 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கி... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு!

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மாதாகோட்டையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட நிா்வாகம், கிராம விழாக் குழுவினா் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட... மேலும் பார்க்க

துக்க நிகழ்வுக்கு வந்த போக்குவரத்து ஊழியா் விபத்தில் பலி!

கும்பகோணம் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் விபத்தில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை நந்தவனம் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை வேண்டும்!

உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் மகள்களின் திருமணத்துக்கு உதவித்தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது... மேலும் பார்க்க

காவிரி டெல்டாவில்தான் நிலத்தடி நீா் ஆதாரம் அதிகம்!

காவிரி டெல்டாவில் உள்ளது போன்று நிலத்தடி நீா் ஆதாரம் வேறு எங்கும் கிடையாது என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் கடையடைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா். சேதுபாவாசத்த... மேலும் பார்க்க