பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!
சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு
புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றங்கள் போன்ற வழக்கமான குற்றங்களையும் மற்றும் பிற கடுமையான குற்றங்ளையும் பிரதானமாக விசாரிக்கும் அமைப்பான சிபிஐயில் ஏராளமான பொறுப்புகளும் செலவுகளும் உள்ளன.
2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னா், ரூ.951.46 கோடியைப் பெற்றது, பின்னர் இது திருத்தப்பட்ட தொகையாக ரூ.986.93 கோடியாக திருத்தப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.84.12 கோடி அதிகமாகும்.
குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு
சிபிஐ பயிற்சி மையங்கள் நவீனப்படுத்துதல், விசாரணைக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் மையங்கள் நிறுவுதல், விரிவான நவீனமயமாக்கல் மற்றும் நிலங்களை வாங்குதல், நிறுவனத்திற்கான அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான சிபிஐ, வங்கி கடன் மோசடிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் கடத்தல் வழக்குகள், மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற வழக்கமான குற்றங்களைத் தவிர, செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ கரன்சி மற்றும் டார்க் வெப் எனப்படும் நிழலுலக இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தீவிர குற்றங்களை கையாள்வதில் ஈடுபட்டுள்ளது.
இது பல்வேறு மாநிலங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்படும் குற்றவியல் வழக்குகளையும் கையாள்கிறது.