ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி
பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு குறித்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மத்திய பட்ஜெட்டைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, ``பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருக்கும். அதற்கேற்றவாறு விவசாயிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் முதல் தொடக்க நிறுவனங்கள், முதலீடுவரையில் ஒவ்வொரு துறையையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட், பிரதமர் மோடியின் `தன்னம்பிக்கை இந்தியா’வுக்கான வரைபடமாகத் திகழ்கிறது.
குறிப்பாக வருமான வரி விலக்கு, நடுத்தர வர்க்கத்தின் நிதி நலனை மென்மேலும் மேம்படுத்தும். பட்ஜெட்டால் பயன்பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி முறையில் தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், ரூ. 12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.
தனிநபர் மாத சம்பளமாக பெறாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் கிடைக்கக் கூடிய வருமானங்களுக்கான வரி சதவிகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
0 - 4 லட்சம் - வரி இல்லை
4 - 8 லட்சம் - 5%
8 - 12 லட்சம் - 10%
12 - 16 லட்சம் - 15%
16 - 20 லட்சம் - 20%
20 - 24 லட்சம் - 25%
24 லட்சத்துக்கு மேல் - 30%
இதையும் படிக்க:வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?