செய்திகள் :

நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் இயங்கும்

post image

தமிழகம் முழுவதும் நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (நிலை) எண்.124/ஜே2/2024 நாள் 21.10.2024ன் வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணிசெய்யும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

மேலும், மங்களகரமான நாளான 03.02.2025 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மங்களகரமான நாளான 03.02.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100- க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராம... மேலும் பார்க்க

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்... மேலும் பார்க்க

மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட... மேலும் பார்க்க

இட்லி கடையில் அருண் விஜய்! என்ன சமைக்கிறார் தனுஷ்?

இட்லி கடை படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களையும் தற்... மேலும் பார்க்க

வளர்ச்சிக்கான உந்துசக்தி: மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி

வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த உந்துசக்தி என்று மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அசாதாரணமான வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க