செய்திகள் :

Sk: "அப்பா, இன்னைக்கு நான் படிச்ச பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்..." - சிவகார்த்திகேயன் உருக்கம்

post image

சுதாகொங்கராவின் 'பராசக்தி' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது தனது அப்பாவுடன் பள்ளிக்குச் சென்று நுழைவுத் தேர்வு எழுதியது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

இதுகுறித்துப் பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், "இந்த ஸ்கூல்ல எட்டாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத அப்பாவோட வந்திருக்கேன். இங்க சீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியா வராது. சுமாராத்தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதியிருந்தேன்.

அப்போ அப்பா என்கிட்ட வந்து, 'நான் யார்கிட்டையும் ரெக்குவஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூல்ல நின்னு கேட்டு சீட்டு வாங்கியிருக்கேன். தயவு செஞ்சு நல்லா படிச்சிடு' அப்டீன்னு சொன்னார்.

sivakarthikeyan
சிவகார்த்திகேயன்

அப்போ எனக்கு, 'நமக்காக அப்பாவ ஒரு மணிநேரம் நிக்க வச்சிட்டோமே'னு ரொம்ப வருத்தப்பட்டேன். 'இப்போ அதே ஸ்கூல்ல சிறப்பு விருந்தினராக வந்திருக்கேன், அப்பா...'. பெரிய ஹீரோ, பிரபலம் என்பதெல்லாம் பெரிய விஷியமில்லை. இங்க இருக்க ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க" என்று பள்ளிக்கால நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் - பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பர... மேலும் பார்க்க

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்' - உருகும் ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'முள்ளும் மலரும்', பிரபு நடிப்பில் 'கலியுகம்', 'உத்தம புருஷன்', 'தர்மசீலன்', 'ராஜா கைய வச்சா', 'தர்மசீலன்', ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'சின்ன கவ... மேலும் பார்க்க

இயக்குநர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் வி.நடராஜன் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

உடல்நலக் குறைவால் தயாரிப்பாளர் `ஆனந்தி ஃபிலிம்ஸ்' நடராஜன் காலமானார்.ரஜினி - மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்', பிரபுவின் `உத்தம புருஷன்', `ராஜா கைய வச்சா', `தர்ம சீலன்', சத்யராஜ் நடித்த ... மேலும் பார்க்க

Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன்

நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.கல்யாண வாழ்க்கைய... மேலும் பார்க்க

Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி' - சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் - ஒரு பார்வை

சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.இப்படத்திற்கு `பராசக்தி' என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான `டான் பிக்சர்ஸ்' . படத்தில் இது... மேலும் பார்க்க