சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
கௌதம் கம்பீர் கூறுவதென்ன?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக மிக முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியின் மதிப்பினை அதிகரிப்பவர்களாக உள்ளனர். அவர்களால் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளனர். நான் ஏற்கனவே கூறியது போல, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற வேட்கை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.