தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
காடுவெட்டி குரு சிலை திறப்பு!
மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குரு நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவீரன் மஞ்சள் படைத் தலைவரும், குருவின் மகனுமான கனலரசன் தலைமை வகித்தாா். சிதம்பரம் நகா் மன்றத் தலைவா் செந்தில்குமாா், குருவின் உருவச் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, குருவின் உருவச் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், ஜெயங்கொண்டம் முன்னாள் நகரச்செயலா் மாதவன் தேவா தலைமையில், குருவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.