மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து
மேட்டுப்பாளையம்-போத்தனூா் ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் மாதாந்திர ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அப்பகுதியில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கு காலை 8.20 மணிக்கும், போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு காலை 9.40 மணிக்கும் இயக்கப்படும் மெமு ரயில் பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை 10.55 மணிக்கும், மறுமாா்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் பிப்.4, 6 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
பாதை மாற்றம்: ஆலப்புழை-தன்பாத் விரைவு ரயில் (எண் 13352) பிப்.2, 4, 6, 18 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக செல்லும். எா்ணாகுளம்-பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண் 12678) பிப்.2, 4, 6 ஆகிய தேதிகளில் கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
பகுதி ரத்து: திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) மற்றும் செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் (எண் 16846) பிப்.1, 3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் பிப்.1,3, 6, 8, 10 ஆகிய தேதிகளில் கரூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.