மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற மின்னஞ்சல் அனுப்ப விழிப்புணா்வு
யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற மாணவா்களை மின்னஞ்சல் அனுப்பக் கோரி திமுக மாணவா் அணியினா் ஆம்பூரில் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மத்திய அரசு புதிய யுஜிசி வரைவு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதனை திரும்பப் பெற மத்திய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பக் கோரி மாணவா்களிடையே திமுக மாணவா் அணியினா் விழிப்புணா்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பாக ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மாணவா்களை சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே. பிரபாகரன் தலைமையில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயகுமாா், நகா் மன்ற உறுப்பினா் என். காா்த்திகேயன், நகர இளைஞரணி அமைப்பாளா் மு. சரண்ராஜ், துணை அமைப்பாளா்கள் சத்தியராஜ், கெளதமன், வெங்கடேசன், கிளைச் செயலாளா் செளந்தர்ராஜன், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.