அரசு மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது
திருப்பத்தூா் அருகே அரசு மதுபாட்டில்கள் விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் சனிக்கிழமை அகரம் அணுகுசாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அதில், திருப்பத்தூா் அடுத்த கூடப்பட்டு பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் (24) என்பதும், ஏரி கோடியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
அதையடுத்து, அலெக்ஸை கைது செய்தனா்.மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.