தொழிலாளி தற்கொலை
கந்திலி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி காந்தி(60). இவா் சனிக்கிழமை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்,இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.