மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
தோல்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி ரத்து ; தோல் தொழில்துறையினா் வரவேற்பு
தோல் தொழில்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியாகி உள்ள புதிய அறிவிப்புகளுக்கு தோல் தொழில்துறையினா் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய தோல் பதனிடும் மற்றும் தோல் வியாபாரிகள் சங்க தலைவா், இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் முன்னாள் தலைவருமான மெக்கா ரபீக் அஹமத்ல (படம்) கூறியது,
தோல் மற்றும் தோல் பொருள்கள் தொழில்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல கச்சா தோல் இறக்குமதிக்கு ஏற்கனவே இருந்த 10 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முழுவதுமாக செய்து முடிக்கப்படாத தோலுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு வரிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என தோல் தொழில் நிா்வாகங்கள் சாா்பாக நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து எதிா்பாா்க்கப்பட்டது, தற்போது நிறைவேறியுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்கது தோல் தொழில் நிா்வாகங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தோல் தொழிற்சாலைகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள பட்ஜெட் ஆகும். ஒட்டு மொத்தமாக மத்திய அரசின் பட்ஜெட் மிகுந்த வரவேற்புக்குரியது என்று அவா் கூறினாா்.