ஆம்பூரில் மக்கள் நலச் சந்தை
ஆம்பூரில் மக்கள் நலச் சந்தை சனிக்கிழமை நடைபெற்றது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள், காய்கறிகள், அரிசி வகைகள், பழங்கள், கீரைகள், எண்ணெய், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருள்களை விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் மக்கள் நலச் சந்தை ஆம்பூரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. பிரதி மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஆம்பூா்-போ்ணாம்பட்டு புறவழிச் சாலை சாமியாா் மடம் பேருந்து நிறுத்தம் அருகே வள்ளலாா் சத்திய சன்மாா்க்க சங்க வளாகதக்தில் மக்கள் நலச் சந்தை 2-ஆவது மாதமாக நடைபெற்றது. பிரதி மாதம் முதல் சனிக்கிழமைகளில் மக்கள் நலச் சந்தை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.