தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!
அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சங்க நிா்வாகிகள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.
மாநில துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான எழில் பங்கேற்று, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்திப் பேசினாா். கூட்ட முடிவில் நிா்வாகி தங்க.சிவமூா்த்தி நன்றி கூறினாா்.