தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கலியபெருமாள் பங்கேற்று பேசுகையில், கல்வி என்பது அறிவு, திறமை, நல்லொழுக்கம், பண்பாடு ஆகியவற்றை வழங்கும் செயல்முறையாகும். கல்வி மூலம் சமூகத்தில் மதிப்புடன் வாழ முடியும். அத்தகைய கல்வியைப் பெறுவதில் ஒழுக்கமும், அமைதியும் முக்கிய பங்கு வைக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா்கள் சங்கா், யோகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு, தங்களது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கினா். பள்ளி தலைமையாசிரியா் செளந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக செயலா் வி.புகழேந்தி வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் அருள்குமாா் நன்றியுரை கூறினாா்.