மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
வாஷிங்டன் விமான விபத்து: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு
அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் விமானத்துடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கபட்டது.
ஏற்கெனவே, ஹெலிகாப்டா் மோதியதால் பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஏா்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஹெலிகாப்டா் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது கிடைத்துள்ளதான் அந்த ஹெலிகாப்டரை யாா் இயக்கியது, அது அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கச் செய்யப்பட்டதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
60 பயணிகள், 4 பணியாளா்களுடன் அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானம் ரீகன் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, அங்கு 3 பேருடன் வந்த ராணுவ ஹெலிகாப்டா் அதன் மீது மோதியது. இதையடுத்து, விமானம் நொறுங்கி பொடோமேக் ஆற்றில் விழுந்தது. விமானத்துடன் மோதிய ஹெலிகாப்டரும் ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்தது. இந் விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த 67 பேரும் உயிரிழந்தனா். அவா்களில் 41 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.