செய்திகள் :

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

post image

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டுள்ளது.

மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தரையில் விழுந்து வெடித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதால், மேலும் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிக்க : ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

இந்த விபத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ள பிலடெல்பியா அவசர மேலாண்மை அலுவலகம், வடகிழக்கு பிலடெல்பியாவிலுள்ள காட்மேன் மற்றும் பஸ்டில்டன் அவென்யூ இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு 67 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், மற்றொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராள... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இது... மேலும் பார்க்க

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற ... மேலும் பார்க்க

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி

ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வட... மேலும் பார்க்க

டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணி... மேலும் பார்க்க