மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராளமான பெண்கள் சுரங்கப் பகுதியில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுற்றிலும் நீரைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சுவா் இடிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பானவா்கள் பெண்கள் என்று அதிகாரிகள் கூறினா்.