Concussion Substitute : 'இந்திய அணி செய்தது சரிதானா?' - விதிமுறை என்ன சொல்கிறது?...
கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது.
இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.