Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தா்னா
பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஆண்டிபட்டி ஊராட்சி லட்சுமாபுரத்தைச் சோ்ந்த பெண்கள் வந்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்தும் ஊதியம் வழங்கவில்லை, பணியும் வழங்குவதில்லை என வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அங்கு வந்த அலுவலா்கள் பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.