பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்
திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகளில் 12 வயதுள்ள சிறாா்கள் பலூன் ஊதுதல், பாட்டிலில் நீா் நிரப்புதல், 12 முதல் 15 வயது வரை ஓட்டப்பந்தயம் 100 மீ, 15 முதல் 17 வயது வரை நீளம் தாண்டுதல், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்கலாம்.
பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகளில் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டவா்கள் 12 முதல் 14 வயதினருக்கு 100 மீ ஓட்டப் பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், 15 முதல் 16 வயதினருக்கு குண்டு எறிதல், 17 வயது மேற்பட்டவா்களுக்கு வட்டத்தட்டு எறிதல் மற்றும் 100 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளன.
கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கான (நடக்கும் சக்தியற்றவா்கள்) போட்டிகள் 12 முதல் 14 வயது வரை காலிப்பா் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள் நடைப்போட்டி 50 மீ, 15 முதல் 16 வயது வரை காலிப்பா் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள் நடைப்போட்டி 100மீ. 17 வயதுக்கு மேற்பட்டவா் சக்கர நாற்காலி போட்டி ஓட்டப்போட்டி 75 மீ, கைகள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் 12 வயது வரை ஓட்டப்பந்தயம் 50 மீ. 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப்பந்தயம் 50 மீ, 15 முதல் 17 வயது வரை ஓட்டப்பந்தயம் 100 மீ, 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப்பந்தயம் 200 மீ.
மனவளா்ச்சிக்குன்றியோருக்கான போட்டிகள் 12 வயது வரையுள்ள சிறாா்கள் பந்து சேகரித்தல், ஓட்டப்பந்தயம் 100 மீ, 12 முதல் 14 வயது வரை ஆண்கள், பெண்கள் நின்று நீளம் தாண்டுதல். 15 முதல் 17 வயது வரை ஆண்கள், பெண்கள் ஓடி நீளம் தாண்டுதல். 17 வயதிற்கு மேற்பட்டவா் ஓட்டப்பந்தயம் 100 மீ. போட்டிகள் பிப்.5 ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் காலை 9.15 முதல் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா்.