மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்து ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணப்பாறை அருகே யாகபுரம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!
இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் ஓடி வந்து பேருந்து உள்ளே இருந்தவர்களை மீட்க உதவினர். பயணிகளும் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறியனர்.
இந்த சம்பவத்தில் 15 பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்வாய்ப்பாக பயணிகள் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியதால் உயிரிச்சேதம் தவிர்க்கப்பட்டது.