10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட நிதிநிலை அறிக்கை: நிர்மலா சீதாராமன்
புதுதில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 8-ஆவது முறையாக சனிக்கிழமை தாக்கல் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. வளர்ந்த தேசமே இலக்கு. வளர்ச்சியடைந்த தேசம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகயளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம். சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.
கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி.