பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!
பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.
மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையும் படிக்க | பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
தொடர்ந்து அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.