"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூ...
கீரவாணி வீட்டு கல்யாணம்; ராஜமௌலி செலெக்ட் செய்த 'மாதம்பட்டி விருந்து' - என்னென்ன உணவுகள் இருந்தன?
ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் இளையமகன் நடிகர் சிம்ஹா கொடுரியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி யு.ஏ.இ-யில் நடைபெற்றது. மூத்த நடிகர் முரளி மோகனின் பேத்தி ராக மாதங்கியை மணந்தார்.
இந்த திருமணத்தில் தெலுங்கு மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி உற்சாகமாக நடமாடிய காட்சிகள் வைரலாகின.
ராஜமௌலி திருமணத்தில் முழுமையாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், ஹைதராபாத்தில் நடந்த திருமண கொண்டாட்ட விருந்தில் என்னென்ன உணவுகள் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாராம்.
இந்த விருந்தை "பாகுபலி குடும்பத்துக்கான பாகுபலி மீல்" என அழைக்கிறார் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). அவர் மெனுவில் என்னென்ன உணவுகள் இருந்தன என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
பாகுபலி மெனு
ஆப்ரிகாட் அல்வா வித் ரோஸ்டட் நட்ஸ்
மினி நெய் கிலேபி வித் ரபடி
வால்நட் பர்பி
மதுரை ஸ்பெஷல் மட்டன் கீமா உருண்டை
பெரி பெரி சிக்கன்
மட்டன் வறுவல்
பிரான் தொக்கு
கறி லீஃப் வஞ்சிரம் தவா ஃபிஷ் ஃப்ரை
நண்டு லாலிபாப்
எலும்பு மஞ்சை ஆம்லேட்
தென்னங்குருத்து தோறல்
பீன்ஸ் பருப்பு உஜில்லி
செட்டிநாடு வெஜ் லிவர் சாப்ஸ்
திருநெல்வேலி அவியல்
கேரளா பைனாப்பிள் பச்சிடி
செட்டிநாடு மா, இஞ்சி, சன்னா புளி மண்டி
வெஜ் கீமா
பன் பரோட்டா
நாட்டுக்கோழி பள்ளிபாளையம் கிரேவி
மாதம்பட்டி ஸ்பெஷல் தம் பிரியாணி
எலும்பு தாள்ச்சா
ரைத்தா
பொன்னி அரிசி சாதம்
கொங்குநாடு ஸ்பெஷல் மட்டன் கெட்டி குழம்பு
பருப்புப்பொடி, நெய்
சின்ன வெங்காயம் முருங்கைக்காய் சாம்பார்
மலபார் மீன் குழம்பு
எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு
பூண்டு ரசம்
தயிர்
அப்பளம்
சாபுதானா வடை
கேரளா ஸ்பெஷல் அடபிரதமன் வடை
பழங்கள்