செய்திகள் :

DaakuMaharaaj Review: `நூடுல்ஸுக்கு தான் 2 மினிட்ஸ், எனக்கு 2 செகண்ட்ஸ்' - பாலைய்யா வென்றாரா?

post image
'அகண்டா', 'வீர சிம்ஹா ரெட்டி', 'பகவந்த் கேசரி' என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணா ஆடியிருக்கும் தாண்டவமே இந்த 'டாக்கு மஹாராஜ்'. பாபி கொல்லி இயக்கத்தில் தமன் இசையில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான இந்தப் படம் டோலிவுட் சங்கராந்தி ரேஸில் வெற்றி பெற்றதா?

ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் பள்ளிக்கூடம் நடத்தி வரும் குருமூர்த்திக்கு சொந்தமாக டீ எஸ்டேட் ஒன்று உள்ளது. அதை குத்தகைக்கு எடுத்திருக்கும் அந்தப் பகுதி எம்.எல்.ஏவும் அவரின் தம்பியும் அதில் வன விலங்கு வேட்டையாடுவது, யானை தந்தம் கடத்துவது போன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பின் பெரிய நெட் வொர்க்  இருக்கிறது. அது குருமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவியின் வாயிலாக தெரிய வர போலீஸிடம் புகாரளிக்கிறார். அதனால், அந்தக் குடும்பத்திற்கும் சின்ன குழந்தையான பேத்திக்கும் ஆபத்து வருகிறது. அதை அறிந்த அந்த வீட்டில் பணியாளராக இருப்பவர் மூலமாக மஹாராஜிற்கு (பாலகிருஷ்ணா) தகவல் தெரிவிக்கப்படுகிறது.

'டாக்கு மஹாராஜ்'

நானாஜி என்ற பெயரில் அந்த வீட்டின் கார் ஓட்டுநராக பணிக்குச் சேரும் பாலகிருஷ்ணா, அந்த குடும்பத்திற்கும் வைஷ்ணவிக்கும் பாதுகாப்பாக இருக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம், அந்தக் குழந்தை வைஷ்ணவியின் மீது ஏன் அதீத பாசத்துடன் இருக்கிறார், நானாஜி (எ) மஹாராஜிற்கு என்ன ஃப்ளாஷ்பேக் ஆகிய கேள்விகளுக்கான பதிலை சொல்லி பாலகிருஷ்ணா படங்களுக்கே உரிய ஆரவாரத்துடனும் மா.....ஸ் பில்டப்புடனும்  வெளியாகியிருக்கிறது 'டாக்கு மஹாராஜ்'.

பாலகிருஷ்ணா... நானாஜியாக வைஷ்ணவி மீது பாசமழை பொழிவது, மஹாராஜாக ஆயுதப் போராட்டத்தில் களம் கண்டு திமிறி எழுவது, சீதாராம் எனும் அரசு அதிகாரியாக கஷ்டப்படும் மக்களை நினைத்து உருகி, அவர்கள் நலனுக்காக உரிமைக் குரல் கொடுத்து நீதி கேட்பது என பாலையாவுக்காகவே தைக்கப்பட்ட சட்டையில் கச்சிதமாகவும் கம்பீரமாகவும் திரையை ஆள்கிறார். பால் வடியும் முகமாக அன்பைக் கொட்டித் தீர்க்கவும் தெரியும், ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷனில் ஆக்ரோஷமாக அர்ப்பரிக்கவும் தெரியும் என்பதற்கு பர்ஃபெக்ட் உதாரணமாக ஜொலிக்கிறார். எல்லா எமோஷன்களையும் அநாயசமாக அவர் ஸ்டைலில் கொடுத்து ரசிக்க வைக்கிறார். 'டபிடி டிபிடி' பாடல் எல்லாம் வேற ரகம்.

'டாக்கு மஹாராஜ்'

டாக்கு மஹாராஜாக குதிரையில் வரும்படியாக சில காட்சிகள் இருக்கின்றன. இவரை இப்படி பார்த்து ரொம்ப வருடங்களானதால் அரங்கம் அதிர்கிறது. பாலையா படங்களில் 'பாலையா மோட்' என்றொரு ஜோன் இருக்கும். அந்த மோடில் இடம்பெறும் காட்சிகளில் மேஜிக் மட்டும்தான் இருக்கும், லாஜிக் எதிர்பார்க்க முடியாது. இந்தப் படத்தில் அந்த மோட் குறைவு. முழுக்க முழுக்க எமோஷனும் மாஸும்தான். டயலாக் டெலிவரியில் அதகளம் செய்யும் பாலையாவுக்கு இந்தப் படத்திலும் அவருக்கான டிரேட்மார்க் வசனங்கள் இருக்கின்றன. 'I did Masters in Murders', 'Don't mess with a Lion and me', 'வாடு மனுஷன் காது வைல்டு அனிமல்', 'சிங்கத்துக்கும் மானுக்குமிடைய நடப்பது போரல்லை. வேட்டை!' நீ கத்தி பேசினால் அது Barking. இதுவே நான் கத்தி பேசினால் அது Roaring' ஆகியவை சில உதாரணங்கள். இன்னும் பல இருக்கின்றன. 

ஷ்ரத்தா ஶ்ரீநாத், பிரக்யா ஜெய்ஸ்வால் என இரு நாயகிகள். இருவரும் இரண்டாம் பாதியில் இருந்துதான் வருகிறார்கள். ஷ்ரத்தா ஶ்ரீநாத் இதுவரை அவர் நடிக்காத கதாபாத்திரம். குறைவான காட்சிகள் என்றாலும் படத்தின் கரு அவர்தான். அவருடைய கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. ஊர்வசி ரெளடல்லா இதில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். வழக்கமாக பாலையா தன் படத்தில் இருக்கும் நாயகியுடன் டான்ஸ் ஆடுவார். இந்தப் படத்தில் அப்படியான சூழல் இல்லை. அதனால், அதற்காக ஊர்வசியின் விஜயம் தேவைப்பட்டிருக்கிறது போல. பாபி தியோல், ஷைன் டாம் சாக்கோ, ரவி கிஷன், சச்சின் கடேகர், சாந்தினி சௌத்ரி என பல நட்சத்திரங்கள். என்ன செய்ய... வானில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவும் சூரியனும் என்னவோ ஒன்றுதான். அது பாலையா தான். 

ஷ்ரத்தா ஶ்ரீநாத்

பொறுமையாக ஆரம்பிக்கும் படம், எல்லா கேரக்டர்களை அறிமுகப்படுத்தி பாலையாவுக்கான பில்டப்பை ஏற்றுகிறது. இரண்டாம் பாதி முழுக்க ஃப்ளாஷ்பேக் தான். சீதாராம் எப்படி பஜரங்பூர் மக்கள் கொண்டாடும் டாக்கு மஹாராஜாக மாறினார் என்பதையும் அதற்கான காரணத்தையும் சொல்கின்றன. பாலையா கதாபாத்திரத்தின் கிராஃப் ஒரு பக்கம் பிரமாண்டமாக இருக்கும் போது, அவருக்கு எதிராக இருக்கும் பாபி தியோலின் கதாபாத்திரமும் அதே அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தால் 'சபாஷ் சரியான போட்டி !' என்றிருந்திருக்கும். சக்கரவர்த்தி ரெட்டியின் திரைக்கதையில் சில ட்விஸ்ட்கள் வொர்க் அவுட்டானாலும் பல இடங்களில் அடுத்து இதுதான் என கணிக்கும்படியான காட்சிகள் இருந்தது நெருடல். 

விஜய் கார்த்திக் கண்ணனின் அசத்தல் ஒளிப்பதிவும் தமனின் இடிமுழுக்க இசையும் படத்தின் பக்கபலமாக தாங்கிப்பிடித்துச் சென்றிருக்கின்றன. பல நிலப்பரப்புகளில் நடக்கும் இந்தக் கதைக்கு தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் உயிரூட்டியிருக்கிறார், விஜய் கார்த்திக் கண்ணன். அதே போல, ஆக்ஷன் காட்சிகளில் பாலகிருஷ்ணா செய்யும் துவம்சங்களை மிக நேர்த்தியாக கையாண்டு சிக்ஸர் அடித்திருக்கிறார். தமன் என்றால் எனர்ஜிதான். அதுவும் பாலகிருஷ்ணா படத்திற்கு இசையமைக்க வேண்டுமென்பதால், ஃப்ரீ ஹிட் பந்தில் இறங்கி வந்து அடித்து அவுட் ஆஃப் தி ஸ்டேடியத்திற்கு பந்தை அனுப்பும் பேட்ஸ்மேன் போல தமனின் அதிரடியில் ஸ்பீக்கர்கள் தெறிக்கின்றன.

அவினாஷ் கொல்லாவின் கலை வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது. திரைக்கதையின் வேகத்தை  நிரஞ்சன் தேவரமனே, ரூபன் ஆகியோரின் படத்தொகுப்பு கூட்ட முயற்சித்திருக்கிறது. வி வெங்கட்டின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி சிறப்பு ! இரவு 12 மணிக்கு வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியில் வைஷ்ணவிக்கு நூடுல்ஸ் சமைத்துகொண்டே ஃபைட்டர்களை நொங்கெடுக்கும் பாலையாவின் ஆக்‌ஷன் வாவ் சொல்ல வைக்கின்றன. `நூடுல்ஸுக்கு தான் 2 மினிட்ஸ், எனக்கு 2 செகண்ட்ஸ்' என்கிற ரேஞ்சுக்கு பரபரப்பைக் கூட்டுகிறார் பாலைய்யா.

நல்ல ஆக்‌ஷன் என்டர்டெயினரை பாலகிருஷ்ணா மூலம் அவருடைய ஜோனில் சொல்லி ரசிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பாபி கொல்லி. பாலையாவின் மூன்று லுக், திரை ஆளுமை, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஸ்டன்ட் என டெக்னிக்கல் டீமின் அபாரமான உழைப்பு ஆகியவை திரைக்கதையில் இருக்கும் சில பல மைனஸ்களை கடந்து 'டாக்கு மஹாராஜை'  ரசிக்க வைக்கிறது. 

ஜெய் பாலைய்யா ! ஜெய் 'டாக்கு மஹாராஜ்' !

Game Changer Review: 'அக்கறை' அரசியல், பார்முலா காதல் காட்சிகள், பிரமாண்டங்கள் - இவை மட்டும் போதுமா?

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் நந்தன் (ராம் சரண்). தனது மாவட்டத்திலிருந்து குற்றவாளிகளை அகற்றும் பணியில், ஆளும் கட்சியின் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமா... மேலும் பார்க்க

Game Changer விழா: விபத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ராம் சரண் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஆந்திர பிரதேசம் மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமஹேந்திரவரம் நகரில் ராம் சரணின் கேம் சேஞ்ஜர் படத்துக்கான புரமோஷன் விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற... மேலும் பார்க்க

Game Changer: படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களின் பட்ஜெட் 75 கோடி! - `ஷாக்'கான ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இத்திரைப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50-வது படம். பிரமாண்டமாக ... மேலும் பார்க்க

Game Changer: `` இந்திய அரசியலின் உண்மையான கேம் சேஞ்சர் பவன் கல்யாண்தான்!'' - ராம் சரண் ஷேரிங்ஸ்

ஷங்கரின் `கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்வு ராஜமுந்திரியில் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். துணை முதல்வராக பதவியேற்றப் பிறகு அ... மேலும் பார்க்க

Game Changer: "இது சங்கராந்தி அல்ல; ராம் சரணின் 'ராம் நவமி'" - இயக்குநர் ஷங்கர் புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெள... மேலும் பார்க்க

Game Changer: "ஷங்கர் தமிழ் இயக்குநர் அல்ல, தெலுங்கு இயக்குநர்; ஏன்னா..." - ராஜமெளலி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வானி அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் ஜேஞ்சர்'.அரசியல் திரில்லர் திரைப்படமான இது வரும் ஜனவரி 10ம் தேதி த... மேலும் பார்க்க