தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
கூண்டில் சிக்கிய பெண் புலி, மீண்டும் வனத்திற்குள் விடுவிப்பதில் சிக்கல் - என்ன நடந்தது?
கேரள மாநிலம் வயநாடு, புல் பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாள்களாக நடமாடி வந்த புலி ஒன்று கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்தது.
மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அச்சத்தில் அந்த புலியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். கால்நடைகளைத் தாக்கி வரும் அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் 5 கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் துப்புரா பகுதியில் நடமாடி வந்த அந்த புலி, நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது. சுமார் 8 வயது மதிக்கத்தக்க அந்த பெண் புலியின் உடலில் பல இடங்களிலும் காயங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மீண்டும் வனத்திற்குள் விடுவித்தால் அதனால் வனவிலங்குகளை வேட்டையாட முடியாது என்பதால் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்திருக்கிறது கேரள வனத்துறை.
இது குறித்து கேரள வனத்துறையினர், " கூண்டில் சிக்கிய புலியை முதற்கட்டமாக குப்பாடி வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. முதலில் அதன் உடல்நிலை ஆய்வு செய்யப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த காரணத்தாலேயே கால்நடைகளை வேட்டையாடியிருக்கிறது. மீண்டும் காட்டிற்குள் விடுவிப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் உயிரியல் பூங்காவில் வைத்தே தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது " என்றனர்.