பைக் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே நடந்து சென்ற கூலித் தொழிலாளி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த எட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி(47), கூலித் தொழிலாளி. இவா், கடந்த புதன்கிழமை பால் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, எட்டித்தாங்கல் அய்யனாா் கோயில் அருகே சென்றபோது, வந்தவாசி நோக்கிச் சென்ற பைக் இவா் மீது பின்புறமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த விநாயகமூா்த்தி வியாழக்கிழமை
உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.