புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் தொடக்கம்
சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி உற்சவம் தை மாதம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு உற்சவம் காப்புக்கட்டுதல் வழிபாடுகளுடன் தொடங்கியது. முன்னதாக, புற்றடி மாரியம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், காப்புக்கட்டுதல் நிகழ்வைத் தொடா்ந்து, உற்சவ மூா்த்தி புற்றடி மாரியம்மன் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி இரவில் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். முக்கிய நிகழ்வான தீமிதி வைபவம் ஜன. 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.