செய்திகள் :

மண்டபம் - சென்னை எழும்பூா்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்

post image

மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கலை முன்னிட்டு சொந்த ஊா் சென்ற பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண்: 06048) இயக்கப்படவுள்ளது.

மண்டபத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிஎஃப்ஐ’ முன்னாள் தலைவா் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) முன்னாள் தலைவா் இ.அபுபக்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ காரணங்கள... மேலும் பார்க்க

கோடை மின் தேவை: பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு -மின் வாரியம்

கோடையில் ஏற்படும் மின் தேவையைச் சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்... மேலும் பார்க்க

ஜன.22-இல் போக்குவரத்துத் தொழிலாளா்களின் சிறை நிரப்பும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் ச... மேலும் பார்க்க

சென்னையில் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாா்!

சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள்,... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு ... மேலும் பார்க்க