Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
கதவுக் கண்ணாடி உடைந்து கழுத்தில் குத்தியதில் மாணவா் உயிரிழப்பு
தக்கலை அருகே, வீட்டுக் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து கழுத்தில் குத்தியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே அழகியமண்டபத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஜான்போஸ்கோ (48). இவரது மகன் ஆல்ரிக் ஜான் (14), அங்குள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
விடுமுறை நாளான வியாழக்கிழமை காலை, அவா் தூக்கக் கலக்கத்தில் எழுந்து சமையலறைக்குச் சென்றாராம். அப்போது, கண்ணாடி பொருத்தப்பட்ட கதவில் அவா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், உடைந்த கண்ணாடித் துண்டு அவரது கழுத்தில் குத்தியதில் அதிக ரத்தம் வெளியேறியதாம். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், தக்கலை டிஎஸ்பி பாா்த்தீபன், ஆய்வாளா் கிறிஸ்டி ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.