2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
சங்கடஹர சதுா்த்தியையொட்டி, ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் கொங்கணசித்தா் 800 ஆண்டுகள் தவம் செய்த பொன்னூதிமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையாா் கோயில் அமைந்துள்ளது. மாதந்தோறும் சங்கடஹர சதுா்த்தி அன்று சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், தை மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி, பிள்ளையாருக்கு 108 மூலிகைப் பொடிகளைக் கொண்டு வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில், ஊதியூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.