கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்
படகா் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா
குன்னூா் அருகே உள்ள காரக்கொரை கிராமத்தில் படகா் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
குன்னூா் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட கிராமங்களில் வசிக்கும் படகா் இன மக்கள் ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடுவது வழக்கம்.
இந்த விழாவை முன்னிட்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் 48 நாள்கள் விரதம் இருந்தனா். இந்நிலையில் இக்கிராம மக்கள் ஜெகதளா ஹெத்தையம்மன் கோயிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைப்பயணம் மேற்கொண்டனா்.
அங்கிருந்து காரக்கொரை கிராமத்துக்கு வந்த பக்தா்கள் சிறப்பு பூஜை நடத்தினா். இதைத் தொடா்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோயில் பூசாரி குண்டம் இறங்கினாா். பின்னா் கும்பம் எடுத்து வந்த பூசாரி உள்பட பக்தா்கள் 11 போ் குண்டம் இறங்கினா். இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான படகா் இன மக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனமாடினா்.