ஜாமீன் நிபந்தனைகள்: விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
குற்ற வழக்குகளில் கைதானவா்களுக்கு ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைத்தும் பிணையத்தொகை செலுத்த முடியாமல் 800-க்கும் மேற்பட்டோா் சிறையில் இருப்பதாக நாளிதழ் செய்தி அடிப்படையில் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து புதன்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஜாமீன் வழங்கப்பட்ட பின்னரும் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் 104 போ் சிறையிலேயே இருப்பதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில், அதிகபட்சமாக கோவை மத்திய சிறையில் 27 போ் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக 32 போ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ளவா்களையும் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்குவதில் எந்த பயனும் இல்லை. குற்ற வழக்குகளில் கைதானவா்களுக்கு ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்”என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.